வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2015

709

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்க படவுள்ளது .17.02.2015  செவ்வாய்கிழமை அதிகாலை 5.30 மணிமுதல் ஆரம்பமாகும் பூசை அபிசேகங்கள்  மறுநாள் காலை வரை  நான்கு கால  பூசைகளும்  அதிகாலை 5.30 மணிக்கு  வசந்த மண்டப பூசையும் தீர்த்தோற்சவமும்  இடம்பெறும் .

மேற்படி சிவராத்திரி  நிகழ்வின் ஆலயத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற இம்முறையும் ஒழுங்கு சசெய்யப்படுள்ளது. சிவராத்திரி விரதமிருக்கும் அடியார்கள்  பாற்குடம்  எடுக்கும் அடியார்கள்  நேர காலத்துடன் அலுவலகத்தில் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் .

சிவராத்திரி தினத்தன்று காலை ஒன்பது மணிமுதல் சமய தீட்சை வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் .

அடியார்களின் வசதி கருதி ஆலயத்தினால்  இரவு 6.00 மணிமுதல் அடுத்த நாள் காலை  6.00 மணி முதல் விசேட போக்குவரத்து  வசதிகளும் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .

10966649_790006674388490_1365173732_n