ஆண் ஆட்டுக்கும், பெண் நாய்க்கும் நடந்த வினோத திருமணம்!!

1550

Mrg

சென்னையில் ஐயர் மந்திரம் ஓத ஆட்டுக்கும், நாய்க்கும் இந்து முன்னணியினர் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

இந்தியாவில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்பினர் நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை ஆர்.கே.நகரில் இந்து முன்னணி சார்பில் ஆண் ஆட்டுக்கும், பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இதில் திருமண சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.மேலும் நிஜ திருமணத்தைப் போலவே ஐயர் மந்திரம் ஓத, இந்த திருமணம் நடைபெற்றது.