காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 72 வயது முதியவர் உயிரிழப்பு..!

1021

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த (வயது 72) கதிர்காமத்தம்மி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். காட்டு யானையின் தாக்குதலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக  நெருப்பு மூட்டிக்கொண்டு அதனருகே அமர்ந்திருந்த முதியவரையே காட்டு யானை தாக்கியுள்ளது. இவ்வாறு நெருப்பு மூட்டிக்கொண்டு அதனருகே அமர்ந்திருந்த இம்முதியவரின்  பின்பக்கமாக வந்த காட்டு யானை  அவரை தூக்கி அடித்து நெருப்பில் வீசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.