மாங்குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

683

sadalam

மாங்குளம் – நீதிபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 70 வயதுடைய நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.