இந்தியாவில் 19 இலங்கை மீனவர்கள் கைதாகி உடனே விடுதலை!!

768

Fish

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 19 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் இருந்து கிழக்கு பகுதியில் சில படகுகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த 4 படகுகளையும் 19 மீனவர்களையும் கொமாண்டர் அனில்குமார் தலைமையிலான கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் நேற்று இரவில் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி பின்னர் அரசின் உத்தரவின் பேரில் நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

அவர்களை எல்லையை கடந்து இலங்கை கடல் பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.