யாழில் கணவனுக்காக கஞ்சா கொண்டு சென்ற 16 வயது மனைவி கைது!!

634

arrests

யாழில் கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி மானிப்பாய் பொலிசாரால் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் திருமணம் முடித்துள்ளார். அவர் தனது தனது கணவர் கேட்டதற்கு இணங்க, 50 கிராம் உடைய கஞ்சாவை வாங்கிச் சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் வைத்து பொலிசார் இவரைக் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சிறுமியிடம் மானிப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.