முல்லைத்தீவு மாவட்ட பிரதேச சபைத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை!!

1343

Puthukkudiyiruppu

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் நாளை (28.02) நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில் தேர்தலை மார்ச் 27ம் திகதிவரை நடத்த வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்காளர் இடாப்பு பிரச்சினை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.