காலி ஊடாக ஹம்பாந்தோட்டை தொடக்கம் புத்தளம் வரையான கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானதென காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறித்த கடற்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.




