செவ்வாய் தோசம் பற்றி எமக்குத் தெரியாத சில அறிவியல் உண்மைகள்!!!!

1027

Wed

நம் முன்னோர்கள் மணிக்கணக்காக, நாட்கணக்காக,மாதக்கணக்காக, வருடக்கணக்காக வானத்தை பார்த்திருந்து கிரகங்களின் அசைவுகளை கண்டறிகிறார்கள். அவர்கள் தந்த அற்புத அறிவியலை,ஒரு சில மூடர்கள் முட நம்பிக்கை என்று சொல்லி, மக்களை முட்டளாக்கினர். இந்த நாத்திகர்கள் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால், நாம் இன்று அறிவியலின் தந்தையர்களாக இருந்திருப்போம்.

தோஷங்கள் பற்றி சோதிடம் சொல்வதை விட, அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாக சிந்திப்பதே சிறந்தது என்று சோதிட கலாநிதி P.H.சர்மா கூறுகிறார். இருக்கும் பல தோஷங்களில் ஒன்றான செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம். தஞ்சையில் உள்ள ஒரு முதியவரான மருத்துவர், ஓலைச்சுவடிகளை புரட்டி விட்டு, “இரத்தப் பிரிவுகளைப் பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால் ஒவ்வொரு மனிதனின் இரத்தக் கூறுகள் வேறுபடுகின்றன. இந்த இரத்த வேறுபாட்டை கைநாடியை வைத்து கண்டறிய முடியும். சில ஆண்களின் இரத்தம் சில பெண்களின் இரத்ததுடன் ஒத்துப் போவதில்லை. இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்க்கும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் குறையுடனும் அல்லது இறக்கவும் செய்கிறது.

நம் காலத்தில் திருமணத்திற்கு முன்னர் இவற்றை பார்ப்பதில்லை. திருமணத்தின் பின்னர் ஏற்படும் சிக்கல்களை அறிந்த பின் பொருந்தாத இரத்தக் கூறு என்பதை வைத்தியர் கண்டறிகிறார். அதற்கு சிக்கிச்சையும் செய்கிறார். ஆனால் நாமோ அந்த மருத்துவ உண்மையை அறியாமல் சோதிடத்திற்குள், தோஷம் என்ற பெயரில் சேர்த்துக் கொள்கிறோம்”, என்று கூறுகிறார்.

இன்றைய மருத்துவ உலகு என்ன சொல்கிறது, எமது இரத்தப்பிரிவு A,B,AB,O என்பது நீங்கள் அறிந்ததே. இதில் 85 வீதமானோர் Rh + உடையவர்களாகவும், மிகுதி 15 வீதம் Rh- உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.இதில் விசேடம் என்னவென்றால் Rh- உள்ளவர்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மிகக் குறைவாகவும், அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் கூடுதலாகவும் உள்ளனர் என்பது தான்.

ஒருவேளை எம் நாட்டு சோதிடர்களைக் கண்டு எல்லா செவ்வாய் தோஷங்களும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடி விட்டனவா? இரத்தத்தில் Rhesusfactor – உள்ள பெண் திருமணம் செய்யு முன் மருத்துவரின் அறிவுரையை பெற்றுக் கொள்வது சிறந்தது.

HIV போன்ற நோய்களுக்காக மட்டுமல்லாது, RH பிரிவு பற்றியும் அறிந்து, கருத்தரித்த காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் காணலாம். Rh – உள்ள பெண்ணின் குழந்தை Rh+ ஆக இருக்குமிடத்து பல பிரச்சனைகளை உருவாக்கும். அநேகமாக முதல் முறை கருத்தரித்த காலத்தில் தாய்க்கு பிரச்சனைகளை தராத போதும், பின்னர் கருத்தரிக்கும் காலத்தில் தாய்க்கோ,பிள்ளைக்கோ ஆபத்து ஏற்படலாம்.கூடவே Rh நோயையும் குழந்தைக்கு ஏற்படுத்தலாம்.

சுருக்கமாக, சரியாக கணிக்கப்பட்ட ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அவரின் குருதி வகை பெரும்பான்மையாக‌ நெகட்டிவ் (‍‍ _ ) ஆகவே இருக்கும்.

அறிவியல் சொல்லும் முன்பே இதனை கணித்த நம் முன்னோர்களின் அறிவை எப்படி பாரட்டுவது, இன்னும் எத்தனை விடயம் நாம் அறியாமல் இருகிறோம்.