வவுனியாவில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!!(படங்கள்)

851

உலக சிறுநீரக தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா நகரசபை மண்டபம் வரை சென்று அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றிருந்தது. இதன்போது சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி, வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா நகரசபை செயலாளர் க.சத்திசீலன் உட்பட பாடசாலை மாணவர்கள், சுகாதார திணைக்களம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தேசிய கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 2 3 4