வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!!(படங்கள்)

691

வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஐ.தே.கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் றோகண கமகே, இந்திரன்ஸ் விடுதி உரிமையாளர் திரு.சஜீந்திரன், கிராம உத்தியோகத்தர், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலை காணியில் 2010ஆம் ஆண்டிலிருந்து முகாம் இட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அண்மையில் வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலை அனைத்து பௌதீக வளங்களையும் ஆரம்பத்திலிருந்து கட்டமைக்க வேண்டியுள்ளமையால் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களிடமும், நலன்விரும்பிகளிடமிருந்தும் உதவிகளை கல்விச்சமுகத்தினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.

1 4 2 3