வவுனியா செட்டிகுளம் அடப்பங்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

1302

settikulam

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அடப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று(15.03) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் தமது பிரதேசத்தில் பொது கட்டிடத்தில் உள்ள இராணுவம் வெளியேற வேண்டும், சமுர்த்தி முத்திரை வழங்கலில் பாரபட்சம் உள்ளதாகவும் தெரிவித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரியகுளத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் அடப்பங்குளம் வரை சென்று அங்கு கிராம அபிவிருத்தி சங்தக்தின் தலைவரிடம் மகஜரை கையளித்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவத்த பொது மக்கள் தமது கிராம பொது கட்டிடத்தை மீட்டுத்தாருங்கள், ஆலய வீதியை புனரமைப்பு செய்து தாருங்கள் உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் இரு மணி நேரமாக இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டம் மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்திருந்தது.