வவுனியா செட்டிக்குளம் கோட்டப் பாடசாலைகளில் 39 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் : நிவர்த்திசெய்து தருமாறு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கோரிக்கை!!

290

999

வவுனியா செட்டிக்குளம் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (16.03) செட்டிகுளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கோட்டக்கல்விப் பணிப்பாளர்..

செட்டிக்குளம் கோட்டத்தில் இயங்கி வந்த 43 பாடசாலைகளில் கடந்தகால போர்ச்சூழல்கள் காரணமாக 8 பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன. தற்சமயம் 35 பாடசாலைகள் மட்டுமே கல்வி போதிக்கின்றன. 5,290 மாணவர்கள் – 360 ஆசிரியர்கள் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

செட்டிக்குளம் கோட்ட அலுவலகம் மின்சாரம், குடிநீர், மலசலகூடம், தளவாடம் இவ்வாறு அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது.

துட்டுவாகையில் ஆரம்ப பாடசாலை ஒன்று அவசரமும் அவசியமுமாக புதிதாக அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

செட்டிக்குளம் கோட்ட பாடசாலைகளில் 39 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் (பற்றாக்குறை) காணப்படுகின்றது.

ஆரம்பப்பிரிவு – 10
விஞ்ஞானம் – 12
கணிதம் – 7
உடற்கல்வி – 6
மனையியல் – 2
சித்திரம் – 2

இவ்வாறு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன் அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். இக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தார்.