வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)

1199

வவுனியா பட்டக்காடு 7ம் ஓழுங்கையில் அமைந்துள்ள வீட்டுக்கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் குணரத்தினம் லக்சிகா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது..

குணரத்தினம் லக்சிகா கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.2015) அன்று இரவு 7 மணியளவில் காணாமல்போனதாகவும் தாங்கள் இரண்டு நாட்களாக தேடியபோதும் இன்று (17.03) காலையில் வீட்டு கிணற்றில் சடலமாக காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

vvvvv1211