வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!!

1033

Hang

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இன்று (18.03) தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றய தினம் இரவு சிதம்பரபுரம், பழைய கற்குளம் பகுதியில் வசிக்கும் விஜயரட்ணம் சபீஸ்வரி என்ற 13வயது மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது குறித்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடா்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.