வவுனியாவில் சுகாதார திணைக்கள தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

748

வடமாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய சுகாதார தொண்டர்களில் 450 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(21.03) சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண சுகாதார சுதேசிய அமைச்சின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 450 சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

1 2 3 4