கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலை..!

604

Sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரெத்தினம், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது. பின்பு முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது.

விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை இரா.சம்பந்தன் மிகவும் ஆணித்தரமாக ஆதரித்து நின்றார்.

அதேவேளையில் மற்றைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை ஆதரித்து தங்களுடைய கருத்துக்களைக் மிகவும் ஆணித்தரமாக கூறினார்கள்.

இந்தப் பிரச்சினை இழுபறி நிலையை அடைந்ததால் ஒரு முடிவில்லாமல் கூட்டம் இன்றுவரை பிற்போடப்பட்டுள்ளது.