வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி யானை பலி!!(படங்கள்)

743

வவுனியா வடக்கு -கனகராயன்குளம் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த தபால் புகையிரதத்துடனே குறித்த யானை மோதியுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியானது, யானைகள் குறுக்கிட்டு செல்லும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டடுள்ளது. குறித்த பகுதியில் யானை செல்கையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இறந்த யானை 35 தொடக்கம் 40 வயதுடையது என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுவதுடன், குறித்த பகுதி யானைகள் குறுக்கிடும் பகுதி என அடையாளமிடப்பட்டுள்ள போதிலும், புகையிரத சாரதிகள் அவதானமின்றி செலுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த யானை மீது வேகமாக வந்த புகையிரதமே மோதியதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். இருப்பினும் குறித்த விபத்தினால் பொக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4