விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சி: கமல்..!

456

vishபுதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சிகளை படமாக்கி உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர். இந்நிலையில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் விஸ்வரூபம்-2 தயாராகி உள்ளது.

கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்துடன், ஒஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை கமல் வெளியிட்டார்.

இந்நிலையில் படத்தின் சிறப்பம்சம் குறித்து சமீபத்தில் கமல் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை உருவாக்கும் போதே, இரண்டாம் பாகம் பற்றி சிந்தித்தேன்.

விஸ்வரூபம் 2 படத்திற்கான 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறோம்.

தண்ணீருக்கு அடியில் வைத்து எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் நிச்சயம் பெரிதாகப் பேசப்படும். மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.