புத்தாண்டுக்காலத்தில் கடந்த வருடத்தை விட இம்முறை விபத்துக்கள் அதிகரிப்பு!

445

Accidents

புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற திடீர் விபத்துக்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2 தினங்களில் 419 திடீர் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பயிற்சி தாதி உத்தியோகத்தர் புஷ்பா சொய்சா கூறினார்.

92 வீதி விபத்துக்கள், 112 சிறு விபத்துக்கள், பட்டாசு கொளுத்தியதில் 03 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.