சொக்லேட் தர மறுத்த மாணவனின் கழுத்தை அறுத்த சகமாணவர்கள்!!

565

cut

சொக்லேட் தர மறுத்த காரணத்தால் மாணவனின் கழுத்தை சக மாணவர்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கலின் சீத்தபட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் முத்தப்பன் (11), தென்னம்பட்டி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் நேற்று மதியம் முழு ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, சக மாணவர்களுடன் வெளியே வந்த முத்தப்பன், அருகிலிருந்த கடையில் சொக்லேட் வாங்கியுள்ளான்.

அப்போது சக மாணவர்கள் தங்களுக்கும் வேண்டும் என கேட்கவே, தரமுடியாது என கூறி மறுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முத்தப்பனை அடித்ததுடன், பிளேடால் கழுத்தை அறுத்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் முத்தப்பனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.