வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், நாங்கள் இயக்கமும் இணைந்து சமுதாயத் தரத்தை உருவாக்கும் செயல்திட்டம்!!(படங்கள்)

946

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், நாங்கள் இயக்கமும் இணைந்து சமுதாயத் தரத்தை உருவாக்கும் – உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சுய உணவுத்தேவையை பூர்த்திசெய்யும் வீட்டுத்தோட்டச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நல்லின விதைகள் வழங்கப்பட்டன.

செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட போரால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு இந்த நல்லின விதைகள் வழங்கப்பட்டன.

பிரஜைகள் குழுவின் செட்டிக்குளம் பகுதி இணைப்பாளர் திரு.றொஹான் தலைமையில் நேற்று (25.04) நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பிரஜைகள் குழுவின் தலைவர் திரு. கி.தேவராசா, உபதலைவர் திரு.நடராசா, நாங்கள் இயக்கத்தின் தலைவர் கோ.ராஜ்குமார், வவுனியா செயற்பாட்டாளர் தேனு, பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்கங்களின் தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

21 22 23 24 25 26 27 28 29 30 31