வவுனியா மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமான நிலையில் : மக்கள் அவதி!!(படங்கள்)

1631

வவுனியா, மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, குளுமாட்டு சந்தியில் இருந்து மருக்காரம்பளை செல்லும் இவ் வீதியானது கணேசபுரம், சமயபுரம், சுந்தரபுரம், மணிபுரம், பத்தினியார் மகிழங்குளம், குகன் நகர், காத்தான் கோட்டம் ஆகிய கிராமங்களுக்கு செல்வதற்கான பிரதான வீதியாகும்.

கடந்த பல வருடங்களுக்கு மேலாக குறித்த வீதி திருத்தப்படவில்லை. இதன்காரணமாக இப் பகுதியில் இருந்து பாடசாலைக்கும் செல்லும் மாணவர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வீதியைத் திருத்தி தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 2 3 45 6 7 8 9