கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குடும்பத்தினரை பாலில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்!!

596

poison_killing_001

வேலூரில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரின் தம்பி மற்றும் 2 தங்கைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேவுள்ள கிராமத்தில் பாலு (50) அவரது மனைவி நாகம்மாள், கிரிஜா, வனஜா என 2 மகள்களும், உதயகுமார் என்ற மகனும் வாழ்ந்து வந்துள்ளனர். நாகம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், சுமதி என்பவரை பாலு 2வது திருமணம் செய்துள்ளார்.

பாலு-சுமதி தம்பதியர்களுக்கு சரத்குமார்(16), விஜயகுமார்(15), லட்சுமணன் (9), உதயகுமாரி (6), லட்சுமி (8) என 5 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் சுமதியும் இறந்துவிட்டதால், 8 குழந்தைகளையும் பாலு வளர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து ஒரு ஆண்டுக்கு முன் உதயகுமாருக்கும், ஜோலார்பேட்டை மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகள் ஷில்பாவுக்கும் (22) திருமணம் நடந்துள்ளது.

உதயகுமார் நாகப்பட்டினத்தில் வேலை செய்து வந்ததால், மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் ஷில்பா மாமனார் மற்றும் கணவரின் தம்பி, தங்கைகள் அனைவரையும் பார்த்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஷில்பாவிற்கும் தருமபுரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஷில்பாவின் மாமனார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த ஷில்பா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாமனார் பாலு, கணவரின் தம்பி லட்சுமணனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

அதனை பருகிய அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, லட்சுமணன் பரிதாபமாக இறந்த நிலையில், பாலுவை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியைடந்த உதயகுமார் ஊர் திரும்பி வந்து ஷில்பா மீது பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், பாலுவின் 2வது மனைவியின் மகள் லட்சுமி (8) கடந்த 6 மாதத்திற்கு முன்பும், உதயகுமாரி (6) 3 மாதத்துக்கு முன்பும் ரத்தவாந்தி எடுத்து இறந்தது தெரியவந்துள்ளது.

அவர்களையும் ஷில்பாதான் விஷம் கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என பொலிசார் கருதிய நிலையில் தற்போது ஷில்பா தலைமறைவாகியுள்ளார்.

எனவே பொலிசார் தற்போது தலைமறைவாகியுள்ள ஷில்பாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.