இறுதிச் சடங்கில் பெட்டிக்குள் இருந்த நபர் கண் விழித்த அதிசயம்!!

923

BOdy

புதுவையில் இறுதி சடங்கிற்காக பெட்டிக்குள் வைக்கப்பட்ட தொழிலாளி திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (54). தனியார் எண்ணெய் நிறுவன தொழிலாளி. கடந்த சில நாட்களாய் உடல்நல குறைவு ஏற்பட்ட அவருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்பதால் அவரை வீட்டிற்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, திடீரென எவ்வித அசைவுமின்றி பாரி படுத்த படுக்கையாக கிடந்துள்ளதால், அவர் இறந்துவிட்ட தாக கருதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதனைதொடர்ந்து பாரியின் உடலை கண்ணாடி பெட்டியில் வைத்து விட்டு இறுதி சடங்கிற்கான வேலைகளில் ஈடுபட்டனர். அப்போது பெட்டிக்குள் வைத்த அரை மணி நேரத்திற்கு பிறகு பாரியின் கை, கால்கள் அசைந்ததுடன், கண்களையும் திறந்து பார்த்துள்ளார்.

இதை இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக அவரை, புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.