வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!!

1243

Thunder

வவுனியா சிப்பிக்குளம் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் வயலின் அருகிலிருந்த பனை மரத்தின் கீழ் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் 39 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான முகைதீன் தம்பி நபீஸ் என அடையாளம் கானப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக பிரேத பரிசோதனைக்கு வவுனியா பொது வைத்திய சாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்