வவுனியாவில் நடைபெற்ற மே தின ஊர்வலம்!!

1191

வவுனியா மாவட்டத்தில் மே தின ஊர்வலம் இன்று(01.05.2015) காலை இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.

இவ்வாறு ஆரம்பமாகிய மே தின ஊர்வலம் இறுதியாக வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்த அதேவேளை அங்கு மே தின கூட்டம் இடம்பெற்றுள்ளது.

மே தின ஊர்வலத்தின்போது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், நெல்லின் விலையை குறைக்காதே, தொழிலாளர் நீதிமன்றத்தை நிறுவு, மாற்று அரசியலை முன்னெடுப்போம், மக்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவோம், இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கொடு, விவசாயிகளின் கடனை இரத்துச்செய் போன்ற கோசங்களை எழுப்பியதுடன் அதுதொடர்பான பதாதைகளையும் தாங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

1 2 30