உண்மையான கிரிமினல் வில்லனுடன் மோதும் ஜெயம் ரவி..!

556

nathanjones_jeyamravi

கொலிவுட் படத்தில் நடிக்க உலக புகழ் பெற்ற மல்யுத்த வீரர்களில் ஒருவரான ‘நேதன் ஜோன்ஸ்’ சென்னை வந்துள்ளார்.

பூலோகம் பட நாயகன் ஜெயம் ரவியுடன் குத்து சண்டை போட வந்த அவரை படத்தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் வரவேற்றுள்ளார்.

இப்படத்தில் நேதன் ஸ்டீவென் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் இந்தியாவில் எடுக்கப்படும் ‘பூலோகம்’ படத்தில் நாயகன் ஜெயம் ரவியுடன் மோதும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அவருடன் ‘லார்நெல் ச்டோக்கால்’ என்ற ஹாலிவுட் முதல் தர சண்டை இயக்குனர் தன் குழுவினருடன் வந்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

மிகுந்த சிரமத்துக்கிடையே அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இயக்குனர் கல்யாண் ஆகியோருடன் ஒருங்கிணைத்து பணியாற்றியுள்ளார் ஹாலிவுட் தமிழர் ஜாக் ராஜசேகர்.

ஒரு மாதம் வரை நடக்க உள்ள இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஏராளமான பொருள் செலவில் பிரசாத் படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

திரை உலகில் இந்த படப்பிடிப்பு ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகவும் படக்குழு கூறுகிறது.

வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இந்தப் படம். இதனால் ‘ஜெயம்’ ரவியுடன் மோதுவதற்காக 7 அடி உயரம், 150 கிலோ எடையுள்ள ஹாலிவுட் நடிகர் நேதன் பிரீன்டன் ஜோன்ஸ் சென்னை வந்துள்ளார்.

இவர் ‘டிராய்’, ஜாக்கிசானுடன் ‘போலீஸ் ஸ்டோரி 4’, டோனி ஜாவுடன் ‘தூம் யூம் கோங்’, ஜெட்லியுடன் ‘பியர்லெஸ்’ ஆகிய படங்கள் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.

‘பூலோகம்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக மட்டும் அவருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இருவரும் மோதுவது போல் நடிக்கும் குத்துச்சண்டைப் போட்டியை சென்னையில் படமாக்க இருக்கிறார்கள். இதற்காக, பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு ஏக்கர் நில பரப்பளவில், 3 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கலை இயக்குனர் மோகன் தலைமையில், 140 தொழிலாளர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லார்னல் ஸ்டோவல் படமாக்க இருக்கிறார்.

மேலும், 1985-87களில் வழிப்பறிகளில் ஈடுபட்ட நேதன் ஜோன்ஸ் 7 வருடங்களுக்கு மேலாக கடுங்காவல் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.