வவுனியா நகரசபை செயலாளரிடம் வரியிறுப்பாளர் சங்கம் ஏழு அம்சக் கோரிக்கை முன்வைத்துள்ளது!!

541

UC

வவுனியா நகரசபை செயலாளரிடம் ஏழு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகர வரியிறுப்பாளர் சங்கம் கடிதமொன்றினை வழங்கியுள்ளது.

அவற்றில் தனியார் பேரூந்துகளை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ளாடைகளுடன் நின்று கழுவுதல் இதனால் பொது மக்கள் மற்றும் பெண்கள் கஸ்டத்தை எதிர்கொள்கின்றனர்.

வவுனியா பிரதான தபால் நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள குழாய் கிணறுகளை திருத்தி மக்கள் பாவனைக்கு வழங்குதல், தெரு விளக்குகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுத்தல், தனியார் கல்வி நிலையங்கள் வீதி பெயர்ப்பலகையில் விளம்பரங்களை ஒட்டுவதனால் அவற்றை தடுத்து நடவடிக்கை எடுத்தல், தெருவோரம் நிறுவப்பட்டுள்ள கராஜ், டயர் கடைகளினால் இடர்பாடுகள் ஏற்படுவதனால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.

தனியார் , அரச வங்கிகளுக்கு முன்பாக வாகனம் நிறுத்துவதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வை காணவேண்டும் மற்றும் கலைமகள் மற்றும் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானங்கள் தொடர்பாக நகரசபையின் பொறுப்பை தெளிவுபடுத்தல் என்ற கோரிக்கைகளையே உடன் தீர்க்குமாறு அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.