பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

603

Milk

பாலுடன் தேன் கலந்து குடித்தால் சமிபாட்டுப் பிரச்சனைகள் குணமாவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு விதமான ஆரோக்கியங்களை வழங்குகிறது.

இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து சமிபாட்டை மேம்படுத்த உதவுகிறது.

கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் குறையும், இதனால் பாலுடன் தேன் கலந்து குடித்தால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.

எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும், பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

இரவு நித்திரைக்குப் போது குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.

மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள், இளஞ்சூடான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமடையும்.

சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனைக் குடித்தால், அதில் உள்ள அன்டி பக்டீரியல், உடலில் உள்ள பக்டீரியாக்களை அழித்து சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட்கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.