பப்பாசிப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

1141

Papow

பழங்களில் சுவையான பழமான பப்பாசியில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

பப்பாசியில் அளவுக்கு அதிகமான அன்டி-அக்ஸிடன்ட், விட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறன.

இத்தகைய அதிகமான அளவு அன்டி-அக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கின்றன.

பப்பாசியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் சமிபாடு எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.

பப்பாசியில் உடலில் ஏற்படும் ஒவ்வாமையை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாசியை சாப்பிடுகின்றனர்.

கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாசி இலை கசாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது.

அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாசி இலைக் கசாயம் சிறந்த பலனளிக்கும்.

பப்பாசி இலைக் கசாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது.

இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றிப் பழுத்த பப்பாசிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.

காலை உணவாக பப்பாசிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாசிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாசிப் பழம் சாப்பிடக் கூடாது.