தெய்வ வழிபாட்டின் மூலம் தோஷ பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கும் முறைகள்!!

558

God

கடும் தோஷ குறைபாடுகள் ஒருவருக்கு இருக்கும்போது பலவித இன்னல்களால் அவதிப்படுவர். என்னதான் அவர்கள் துன்பங்களை அனுபவித்தாலும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

புகழ்பெற்ற பல ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பரிகாரம் செய்து பலன் கொடுக்கவில்லை எனில், தகுந்த ஜாதகரை கலந்தாலோசிக்க வேண்டும்.

நம் ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள வீடுகளில் எந்த வீட்டினால் நமக்கு பாதிப்படைந்துள்ளதோ அந்த வீட்டின் அதிதேவதை எடுத்துக்காட்டாக [ரிஷப ராசி] சுக்கிரனுக்குரிய வீடு இந்த வீட்டில் ஏதேனும் பொருந்தாத கிரகங்கள் உட்காரும்போது அந்த வீடு பாதிப்படையும்.

இதை நிவர்த்தி செய்ய சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஸ்ரீரங்கம் பெருமாள் ஆவார். இவரை தொடர்ந்து தியானம் செய்து வரவேண்டும். தொடர்ந்து இவருக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில் விரதம், இருந்து வர வேண்டும். இவருக்குரிய பாடல்கள் பாராயணங்கள் முதலியவற்றை வாசித்து வர வேண்டும்.

அடிக்கடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்படி எந்த வீடு பாதிப்படைகிறதோ அந்த வீட்டிற்க்கு காரணமான அதிதேவதைகளை தொடர்ந்து வழிபட வேண்டும். கீழே அதிபதிகள் அதிதேவதைகளுக்கான விபரம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த வீடு பாதிப்படைந்ததாக தெரிகிறதோ அந்த வீட்டின் அதிபதியான கடவுளை தொடர்ந்து வழிபட்டால் இன்னல்களில் இருந்து நன்மை கிடைக்கும்.

* மேஷம்- செவ்வாய்-பழனி முருகன்

* ரிஷபம்-சுக்கிரன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* மிதுனம்-புதன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* கடகம்-சந்திரன்-திருப்பதி வெங்கடாசலபதி

* சிம்மம்-சூரியன்- சிவன்

* கன்னி-புதன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* துலாம்-சுக்கிரன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* விருச்சிகம்-செவ்வாய்-பழனி முருகன்

* தனுசு-குரு-திருச்செந்தூர் முருகன்

* மகரம்-சனி-காளி

* கும்பம்-சனி-காளி

* மீனம்-குரு-திருச்செந்தூர் முருகன்