வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!!

1053

TNA

முக்கிய விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் இடம்பெற்று வருகிறது.

இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் ஆரம்பமானது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், புதிய அரசின் நடவடிக்கைகள், அங்கத்துவ கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ள ஆசன பங்கீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் கலந்துரையாடப்படவுள்ளன.