வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

667

இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா அலுவலகத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் துடுப்பாட்டப்போட்டிகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 139 இளைஞர் கழகங்களுக்கு இவ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களிற்கிடையிலான சினேகபூர்வ விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வுகளில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி அமைப்பாளர் ரோகன கமகே, வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 2