வவுனியாவில் பஸ் மிதிபலகையில் பயணித்த நபர் கீழே விழுந்து பலி!!

656

Bus

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸின் முன் கதவு மிதிபலகையில் சென்ற நபரே இவ்வாறு விழுந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த 56 வயது நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

விபத்தை அடுத்து பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.