தொலைபேசி மூலமாக பலரை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசெட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணம் கேட்டு அச்சுறுத்தும் நபர்கள் பற்றி உடனடியாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரிவின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
தமிழ், முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பல பேரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு பணம் பறிக்கும் நபர்களுக்கு எதிரான இரகசிய பொலிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக எந்த நபராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அச்சுறுத்தி பணம் கேட்டால், அது பற்றி, பயப்படாது, பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
அல்லது கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0112 444 480 அல்லது 0112 818 283 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுள்ளது.