பேஸ்புக்கில் லைக் போட்டதால் மாட்டிக்கொண்ட குற்றவாளி!!

368

Fb

தேடப்படும் குற்றவாளி என பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தனது புகைப்படத்தை லைக் செய்ததன் மூலமாக குற்றவாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தை சேர்ந்தவர் 23 வயதான லேவி சார்லஸ் ரியர்டன். இவர் வழிப்பறி, திருட்டு என தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே நீதிமன்றம் இவருக்கு இரண்டு முறை கைது ஆணை பிறப்பித்தது. ஆனாலும் அவர் பொலிஸில் மாட்டாமல் தலைமறைவாக சுற்றிக்கொண்டிருந்தார்.

எனவே இவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்து, இதற்கென உள்ள பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் லேவி சார்லஸின் குற்ற விபரங்கள், புகைப்படம் மற்றும் அங்க அடையாளத்தை வெளியிட்டது பொலிஸ். இந்த பக்கத்தை பொதுமக்கள் பார்த்து குற்றவாளியை பிடிக்க உதவுவார்கள் என நினைத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

குற்றவாளியான லேவி சார்லஸே குறும்பாக பொலிஸ் வெளியிட்ட தனது புகைப்படத்தை லைக் செய்தார். இதை சற்றும் ஏதிர்பாக்காத பொலிஸ் உடனடியாக அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளது. இதை தான் மணலில் பதிந்து மறைந்திருக்கும் தவளை தன் வாயாலேயே குரலை எழுப்பி தின்பாரிடத்து தன்னை காட்டி கொடுத்துவிடும் என்பதை “நுணலும் தன் வாயால் கெடும்” என முன்னோர்கள் கூறியுள்ளனர்.