தாஜ்மகால் சுவர் திடீரென இடிந்ததால் பரபரப்பு!!

690

Tajmahal

ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலில் ஒரு சுவர் பகுதி நேற்று காலை 6 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதைக் கண்டு தாஜ்மகால் நிர்வாக அதிகாரி தனுஜ்சர்மா, பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்போது அங்கு பார்வையாளர்கள் யாரும் இல்லாததால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பாக தனுஜ்சர்மா கூறும்போது, கடந்த காலத்தில் நிறைய குரங்குகள் வந்து அட்டூழியம் செய்தன. அதன் விளைவாகக்கூட இந்த சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்றார். இப்போது சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.