கைவி­டப்­பட்ட ஆய்­வு­கூ­டத்தில் கண்­ணாடி ஜாடி­களில் மம்­மி­யா­கிய நிலையில் குழந்தைகளின் எச்­சங்கள்!!

339

Mummy

ரஷ்­யாவில் பின்­தங்­கிய நக­ரொன்­றி­லி­ருந்த கைவி­டப்­பட்ட ஆய்­வு­கூ­ட­மொன்­றி­லி­ருந்து கண்­ணாடி ஜாடி­களில் அடைக்­கப்­பட்டு மம்மியா­கிய நிலையில் காணப்­பட்ட குழந்தைகளின் எச்­சங்­களும் மனித உடல் உறுப்­பு­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

மேற்கு சைபீ­ரி­யாவில் தொபோல்ஸ்க் எனும் இடத்­தி­லுள்ள கைவி­டப்­பட்ட நோயியல் ஆராய்ச்சி ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து மேற்­படி எச்சங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டமை பிராந்­திய மக்கள் மத்­தியில் பெரிதும் அதிர்ச்­ சியைத் தோற்­று­வித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பல சடல எச்­சங்­களில் பரி­சோ­தனை செயற்­கி­ர­மங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டமைக்கு சான்­றாக காய அடை­யா­ளங்கள் காணப்பட்டன. அந்த குழந்­தை­களின் உடல்­களில் சில சுமார் 3 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது. மேற்­படி உடல்கள் அடைக்­கப்­பட்­டி­ருந்த ஜாடி­களில் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி என திகதி குறிப்­பி­டப்­பட்­டிருந்­துள்­ளது.

தொபோல்ஸ்க் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த மருத்­துவக் கல்­லூரி மாணவர் ஒரு­வ­ரா­லேயே இந்த கைவி­டப்­பட்ட ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்த எச்­சங்கள் கண்­டு­பி­டிக்கப்­பட்­டுள்­ளன. அந்த குழந்­தை­களின் எச்­சங்­க­ளுக்கு அருகில் அந்த குழந்தைகளது குடும்ப விபரங்களை உள்ளடக்கிய ஆவணங்களும் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.