வவுனியா பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருடன் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சந்திப்பு!!

618

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளுக்குமிடையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருக்கும் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த நேரசூசி பிரச்சனைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் பேரூந்து நிலையத்தில் இருந்து இரு சாராரும் சேவையில் ஈடுபடுதல் மற்றும் வெளி மாகாண பேரூந்துகள் இலங்கைப் போக்குவரத்து சங்க நிலையத்தில் தரித்து செல்வதால் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

எதிர்வரும் 11 ஆம் திகதி வட மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்த நிலையிலேயே இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

22 21