வவுனியா நகரவரியிறுப்பாளர் சங்கத்தினருடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!!

1120

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்திற்கும் வடமாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08.05.2015) வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் வரிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின் கடந்தகால ஆவணங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படாமை உள்ளிட்ட நகரின் அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது தற்போது வருமான வரியை அறவிடப் பயன்படுத்தும் 2009 ஆம் ஆண்டு வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளின் வரி அறவீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு ஆவணங்கள் நகரசபையிடம் இல்லாமையால் அவற்றில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி அது தொடா்பான விசாரணைகளை மேற்கொள்வது எனவும் மீள மதிப்பீடுகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பி.எஸ்.குமார, வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் மற்றும் வரியிறுப்பாளர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

30 31