வவுனியா – மன்னாரில் காணி அபகரிப்புக்கு தடை !!

653

Land

வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் மற்றும் வவுனியா, மன்னார் பிரதேசங்களிலும் காடழிப்பு மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடைசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காடழிப்பிலும், காணி சுவீகரிப்பிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வில்பத்து சரணாலயத்தின் வனப்பகுதி அழிக்கப்பட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனினால் சட்டவிரோதமான முறையில் தமது ஆதரவாளர்கள் குடியேற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சுற்றாடல் பாதுகாப்பு துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் றிசாட் பதியுதீன் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஹிரு நியூஸ்-