வவுனியா வளாகத்தில் வர்த்தக முகாமைத்துவ இளமாணி கற்கைநெறிகள் ஆரம்பம்!!

560

vavuniya

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் வர்த்தக முகாமைத்துவ இளமாணி கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா வளாகத்தினில் இப் புதிய கற்கைநெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வர்தக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

2014ம் மற்றும் 2015ம் கல்வி ஆண்டில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், இக்கற்கை நெறியானது விசேட அனுமதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதால் 2014ம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் சித்தியெய்திய அனைத்துப்பிரிவு மாணவர்களும் (கலை, வர்த்தகம், விஞ்ஞானம், மற்றும் கணிதம்) விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கான மேலதிக விபரங்களினை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள மாணவர்களுக்கான கையேட்டின் மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தள்ளார்.