வவுனியாவில் உயர்தர மாணவர்களுக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த முன்னோடிப் பரீட்சை!!

648

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த வருடமும் கல்விப் பொதுத்தர உயர்தர மாணவர்களிற்கான வருடாந்த முன்னோடிப் பரீட்சை இந்த மாதம் 18 தொடக்கம் 27 வரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற வட மாகாண மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

வவுனியாவில் கணித,உயிரியல் மற்றும் வர்த்தக பிரிவு மாணவர்களும், ஏனைய மாவட்டங்களில் கணித, உயிரியல் பிரிவு மாணவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

வழமை போலவே மாணவர் நலன் கருதி இலவசமாகவே இந்த வருடாந்த முன்னோடிப் பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடைப் பத்திரங்களும் வழங்கப்படும்.

மாணவர்கள் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது தொடர்ந்து, மாணவர்களுக்கான முன்னேற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

1 2 3 4 5 8 9 10 6 7