அப்ரிடி அதிரடியால் பாகிஸ்தான் வெற்றி..!

381

afridiபாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி  50  ஓவரில் 9  விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.

அப்ரிடியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர்  55  பந்தில்  76 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி,  5 சிக்சர் அடங்கும்.

கேப்டன் மிஸ்பா–உல்–ஹக்52 ஓட்டங்கள்   எடுத்தார். ஹோல்டர் 4 விக்கெட்டும், கேமர் ரோச், பிராவோ தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

225 ஓட்டங்கள்  இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. பேட்டிங்கில் முத்திரை பதித்த அப்ரிடி பந்து வீச்சுலும் சாதித்தார். அவரது அபாரமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சரிந்தன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ஓவரில்98 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 126 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அப்ரிடி 9 ஓவர் வீசி 12 ஓட்டங்கள்  கொடுத்து7 விக்கெட் கைப்பற்றினார். முகமது இர்பானுக்கு 2 விக்கெட் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாமுவேல்ஸ் அதிகபட்சமாக25 ஓட்டங்கள்  எடுத்தார். கிறிஸ் கெய்ல் உள்பட 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

76 ஓட்டங்கள்  குவித்து, 7 விக்கெட் வீழ்த்திய அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1–0என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2–வது ஒருநாள் போட்டி கயானாவில் நாளை நடைபெறுகிறது.