வவுனியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்துவருகின்றது. இதனால் பல குளங்கள் வான் பாய்கின்றன. மழையுடன் இடி மின்னலின் தாக்கமும் கடுமையாக உள்ளது.
இன் நிலையில் நேற்று(14.05) இலுப்பையடியில் உள்ள பாரிய மரம் ஒன்றின் மீது பாரிய இடி ஒன்று தாக்கியுள்ளது. இதனால் மரம் சேதத்திற்கு உள்ளானது. எனினும் மரத்திற்கு கீழ் நின்ற பொதுமக்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
-தர்சன்-









