தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் அமரர் திரு.கிறிஸ்ரி குகராஜா (குகன்) அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள அவரின் நினைவுத் தூபியில் நேற்று (15.05) சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தினால் (சிறீ ரெலோ) மாலை 6.00 மணியளவில் அனுட்டிக்கப்பட்டது.
இந்நிகழவானது சிறீ ரெலொ கட்சியின் செயளாளர் நாயகம் திரு.உதயராசாவின் பணிப்பின் பெயரில் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.இரவீந்திரன் (பில்லா) தலைமையில் இடம்பெற்றது.
மேலும் குகன் அவர்களின் உருவப்படத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் போராளிகள், தளபதிகள், சிறீ ரெலோ கட்சியின் உறுப்பினர்கள், சிறீ ரெலோ இளைஞர் ஒன்றியத்தினர் மற்றும் குகன் அவர்களின் நண்பர்களான திரு.கண்ணன், ரஞ்சித் மற்றும் ஜீவன், ராஜன் ஆகியோருடன் அவரின் குடும்பத்தினரும், யங்ஸ்ரார் விீளையாட்டுக் கழகத்தினரும், உறவினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தும் தீபம் ஏற்றியும் அன்னாரின் நினைவு தினத்தை அனுட்டித்தனர்.





