வவுனியா சிறுவர் இல்லத்திற்கு உதவி செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிய ‘இந்த பொண்ணுகளே இப்படித்தான்’ திரைக்குழுவினர்!!

356

‘இந்த பொண்ணுகளே இப்படித்தான்’ குறும்படத்தை திரையிட்டது மற்றும் ஒளிபரப்பு உரிமங்களின் ஊடாக கிடைத்த பணத்தில் படக் குழுவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளை செய்துள்ளனர்.

படத்தின் தயாரிப்புச் செலவு தவிர்ந்த மிகுதிப் பணத்தை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உதவித்திட்டங்களிற்கு செலவிட்டுள்ளனர்.

குறிப்பாக சிறார்களின் நலன்களில் அக்கறைகொண்டு, வவுனியாவிலுள்ள இந்து அன்பகம் சிறுவர் இல்லத்திற்கு இயக்குனர் எழில்வேந்தன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்று உதவிகள் செய்துள்ளனர்.

1 2