இளவரசன் மரணமானது எப்படி? – நாளை மர்ம முடிச்சுகள் அவிழும்..!

448

ilavarasanதர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். எனவே இளவரசன் பிணத்தை மீண்டும் பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், இளவரசன் உடலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் மூலம் மறு பிரேதபரிசோதனை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த13ந் திகதி இளவரசனின் உடலை எய்ம்ஸ் டாக்டர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த மறு பிரதே பரிசோதனை அறிக்கையை இன்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மருத்துவக் குழு தாக்கல் செய்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் கலையரசன் இந்த அறிக்கையை பெற்றுக் கொண்டார். நாளை இந்த அறிக்கை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சமர்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகே, இளவரசன் சாவு தொடர்பான மர்ம முடிச்சுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.