வவுனியாவில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை!!(படங்கள்)

574

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் வவுனியா மாவட்ட ஏற்பாட்டில் இம்முறை கல்விப் பொதுத் தர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை இம்மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்து வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் நேற்றுடன் நடைபெற்று முடிந்தது.

மாணவர் நலன் கருதி இப்பரீட்சை இலவசமாகவே நடைபெற்றது. வவுனியாவில் கணித, உயிரியல் மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களும், மற்றைய மாவட்டங்களில் கணித மற்றும் உயிரியல் பிரிவு மாணவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

அனைத்து மாணவர்களுக்கான புள்ளித் திட்டமும் இலவசமாகவே வழங்கப்படும். மாணவர்களின் கல்வி நடவடிக்கையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வழிகளில் உதவி புரியும் இச்சங்கமானது, இப்பரீட்சை மூலமாக சிறந்த வழிகாட்டல் ஒன்றினையும், பொதுப் பரீட்சைக்கான முன்னோடியாகவும் இப்பரீட்சை அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10